மியான்மரில் நிலச்சரிவு 100 பேர் பரிதாப பலி

By ராய்ட்டர்ஸ்

மியான்மரில் நேற்று திடீரென நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மியான்மரின் வடக்குப் பகுதி யான கச்சின் மாகாணத்தில் உள்ள பாகன்ட் என்ற இடத்தில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன.

இதன் அருகே உள்ள மலைப்பகுதிகளில் விலை உயர்ந்த கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் கிராம மக்கள் இந்த விலை உயர்ந்த கற்களை அவ்வப்போது தோண்டி எடுத்து, அதனை வெளிநாடுகளில் விற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுரங்கம் அருகே நேற்று திடீ ரென நிலச்சரிவு ஏற்பட்டதில், விலை உயர்ந்த கற்களை தோண்டி எடுப்பதற்காக சென்ற தொழி லாளர்களும் மண்ணோடு மண் ணாக புதைந்து பலியாகினர். மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இடிபாடுகளில் இருந்து இதுவரை 100 சடலங்களை மீட்டுள் ளோம்.

தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தோண்டத் தோண்ட சடலங்களும் வந்து கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்