வரலாறு படைத்த ஐக்கிய அரபு அமீரகம்: செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்து ‘நம்பிக்கை விண்கலம்’ : 49 கோடியே கி.மீ.தொலைவு 201 நாட்கள் பயணம்

By செய்திப்பிரிவு

வளைகுடா நாடுகளில் முதல்முறையாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய 'நம்பிக்கை' விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை நேற்று சென்றடைந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அல் அமால்” என்று அரபு மொழியில் பெயரிடப்பட்ட (நம்பிக்கை) இந்த விண்கலம், 1.3 டன் எடை கொண்டதாகும். இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நம்பிக்கை’ விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி செவ்வாய் கிரகத்தைச் சென்ற அடைந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 2021-ம் ஆண்டுடன் 50-வது ஆண்டு ஆகியது என்பதால், அதன் நினைவாக இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை அனுப்பப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப்பாதைக்குள் நுழைவதற்கு நம்பிக்கை விண்கலத்தின் பிரதான எஞ்சின்கள் ஏறக்குறைய 27 நிமிடங்கள்தொடர்ந்து இயங்கி நீள்வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக சென்று சேர்ந்தது. அதன்பின் 11 நிமிடங்களுக்குப்பின் செவ்வாய்கிரகத்திலிருந்து சிக்னல்களை பூமிக்கு அனுப்பியவுடன் ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்துதங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுதவிர சீனா அனுப்பிய விண்கலமும், அமெரிக்கா அனுப்பிய விண்கலமும் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றுள்ளன. சீனாவின் விண்கலம் இன்று அல்லது நாளை செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப்பாதைக்குள் நுழையும். அமெரிக்காவின் ப்ரசர்வெரன்ஸ் விண்கலம் அடுத்தவாரத்தில் நுழையும் எனத்தெரிகிறது.

இந்த ‘நம்பிக்கை’ விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் அரசு 20 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஏறக்குறைய 6 ஆண்டுகள் தீவிர முயற்சியின் பயனாக 135 பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்த விண்கலம் விண்ணில் தயாரானது.

வழக்கமாக செவ்வாய் கிரகத்துக்கான விண்கலத்தை தயார் செய்ய 10 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படும்போது, ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் வெறும் 6 ஆண்டுகளில் அதைச் செய்து முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய திட்டத்தின் இயக்குநர் உமர் ெஷரீப் கூறுகையில் “ ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்த வெற்றியைச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும். செவ்வாய் கிரகத்தை ஐக்கிய அரபு அமீரகம் தொட்டுவிட்டது.

செவ்வாய்கிரகத்துக்கு பல நாடுகள் அனுப்பிய விண்கலங்களில் 60 சதவீதம் தோல்வியில் முடிந்தது, பாதி வழியில் நொறுங்கியது, வெடித்து தீப்பிடித்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக ஏவியுள்ளது” எனத் தெரிவி்த்தார்.

நம்பிக்கை விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு சென்ற வெற்றியை கொண்டாடும் வகையில் புர்ஜ் கலிபா கோபுரத்தில் விண்கலத்தின் நிழற்படம் ஒளிரவிட்டு கொண்டாடப்பட்டது.

சீனாவின் விண்கலம் நாளைக்குள் செவ்வாய் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்துவிட்டால், செவ்வாய்கிரகத்துக்குள் சென்ற 2-வதுநாடு எனும் பெருமையை சீனா பெறும். அமெரிக்கா இதுவரை 8 முறை விண்கலத்தை அனுப்பியுள்ளது. செவ்வாய்கிரகத்தை இதுவரை 6 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. அமெரிக்காவின் 3 விண்கலங்கள், ஐரோப்பியநாடுகளைச் சேர்ந்த இரு விண்கலங்கள், இந்தியாவின் சார்பில் ஒரு விண்கலம் சுற்றி வருகின்றன.

செவ்வாய் கிரகத்தின் ஆண்டுப்படி 687 நாட்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் நம்பிக்கை விண்கலம், அந்தக் கிரகத்தின் காலநிலை, பருவநிலை, பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் எவ்வாறு வேறுபட்டுள்ளது, செவ்வாய் கிரகத்தில் ஏன் தூசி நிறைந்துள்ளது, சிவப்பு நிறமாகக் காட்சி தர என்ன காரணம், அங்குள்ள தன்மைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்