பிரான்ஸில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் கூறும்போது, “ஐரோப்பா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களில் அவசியமான பயணம் மேற்கொள்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும். மேலும், கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் உள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்