அர்ஜென்டினா அதிபராகிறார் மாக்ரி: ஆளும் கட்சிக்கு தோல்வி

By ஏஎஃப்பி

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான மவுரிசி யோ மாக்ரி வெற்றி பெற்றுள்ளார்.

அர்ஜென்டினாவின் அதிபர் தேர்தல் அண்மையில் நடந்தது.நேற்று முன்தினம் முதல் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளரான மவுரிசியோ மாக்ரி 51.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆளும்கட்சியின் ஸ்கியோலி 48.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் மாக்ரியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

தற்போதைய பெண் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னெர் 2007 டிசம்பர் 10-ம் தேதி முதல் அதிபராக உள்ளார். அவருக்கு முன்பு அவரின் கணவர் நெஸ்டர் கிர்ச்னெர் 2003 முதல் 2007 டிசம்பர் 10 வரை அதிபராக இருந்தார்.

தற்போது ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்கியோலி, நெஸ்டர் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்தார்.

கிறிஸ்டினாவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் அர்ஜென்டினா அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதாக பிரச்சாரம் செய்த மாக்ரி, தற்போது வெற்றிபெற்றுள்ளார்.

மாக்ரி தாராள சந்தை மயமாக்கலுக்கு ஆதரவானவர் எனக் கூறப்படுகிறது. இதனால், லத்தீன் அமெரிக்க நாடு களில் மாக்ரியின் தேர்வு தாக் கத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மாக்ரியின் வெற்றி மூலம், அர்ஜென்டினாவில் 12 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. கடனைத் திருப்பித் தர இயலாத அர்ஜென்டினா மீது வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்