அதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

துபாயில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து அல்ஜெசிரா வெளியிட்ட செய்தியில், “துபாயில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு திருமணங்கள், உணவு விடுதிகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நான்கு பேர் மட்டுமே உணவு விடுதிகளில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாகக் கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய அமீரகத்திலும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்