பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் நேற்று பயணிகள் பஸ்ஸும் லாரியும் மோதிக் கொண்டதில் 42 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்கு பிரான்ஸின் கிரோன்டி மாகாணம் புஸிகுயின் நகரில் 50 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்ஸும் லாரியும் தீப்பிடித்து எரிந்தன.
பஸ்ஸில் இருந்த 40 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். லாரியை ஓட்டிய டிரைவரும் கிளீனரும் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆவர். 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
முதல்கட்ட விசாரணையில், லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந் துள்ளது. பஸ்ஸை ஓட்டிய டிரைவர் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் அவர் குணமடைந்த பிறகு அவரிடம் தகவல்கள் சேகரிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1982-ம் ஆண்டில் கிழக்கு பிரான்ஸின் பெய்னி நகரில் நேரிட்ட விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸில் மீண்டும் கொடூர விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago