உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதி உதவியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும் என்று அறிவித்தார்.
அமெரிக்காவின் இம்முடிவை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகளின் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பை ஆதரிப்பது மிக முக்கியமானது. உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago