பிரிட்டனில் இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், போலீஸாருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் மருத்துவக் குழு தரப்பில், “பிரிட்டனில் இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், போலீஸார், வணிகர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு அடுத்து இவர்களுக்குச் செலுத்துவது முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக மாடர்னா தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டன் அரசு சமீபத்தில் தெரிவித்தது. அங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
» பொது இடங்களில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட சிலைகளை அகற்றுக: உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்பப் பணிகள்; உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும்: ராமதாஸ்
புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago