ஆசாத் ரஷ்யாவிலேயே இருந்துவிடுவது நல்லது: துருக்கி பிரதமர்

By ராய்ட்டர்ஸ்

சிரியாவில் நல்லதொரு மாற்றம் ஏற்பட ரஷ்யா சென்றிருக்கும் அந்நாட்டு அதிபர் ஆசாத் அந்த நாட்டிலேயே இருந்துவிடுவது அவரது நாட்டு மக்களுக்கு நல்லது என்று துருக்கி பிரதமர் அஹ்மத் டேவ்டாங்லு கூறினார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு பிரதமர் டேவ்டாங்லு, "சிரியாவில் நெறியில்லாத சூழலே இருந்து வருகிறது. இந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படக் கூடிய எந்த சூழலும் தோன்றவில்லை. அந்த நாட்டிலிருந்து மாஸ்கோ சென்றிருக்கும் ஆசாத்தினால் அங்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட நான் விரும்புகிறேன்.

அவர் மாஸ்கோவிலேயே இருந்துவிட்டால் சிரிய நாட்டு மக்களுக்கு இனியாவது நன்மை ஏற்படும். அவர் அங்கேயே தங்கிவிட்டால் சிரியாவை பிடித்த மோசமான காலம் போய்விடும். மாற்றம் ஏற்படும்." என்றார்.

சிரிய அதிபர் பஷார் அல்- ஆசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ரஷ்யா அளித்த ராணுவ உதவிக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பின்னணியை குறிப்பிட்டு துருக்கி பிரதமர் அஹ்மத் டேவ்டாங்லு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேபோல ஆசாதின் ரஷ்ய பயணத்தையும் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்புக்கும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்