ஈரானில் கரோனா பலி 56,360 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 56,360 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 6,408 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டனர். மேலும் 98 பேர் பலியாக அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56,360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஈரானில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இதுவரை 79 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்துக்கும் அதிமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த வாரம் தொடங்கியுள்ளது.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்