ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து: பிரிட்டன்

By செய்திப்பிரிவு

பிரிட்டனில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹான்காக் கூறும்போது, “பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தியுள்ளோம். வாரத்திற்கு 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பிரிட்டனில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்