உலகம் முழுவதும் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவ பல்கலைகழகம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 9,02,16,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.தொடர்ந்து கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. சமீப நாட்களாக ஐரோப்பாவிலும் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
» பறவை காய்ச்சல்; , உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகளில் கண்காணிப்பு: மத்திய அரசு அறிவுறுத்தல்
சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
37 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago