சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ஹூபே மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாரத்தில் மட்டும் 300க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு சீனா அனுமதி அளித்தது. முன்னதாக, மருத்துவப் பணியாளர்கள் உட்பட சிறிய குழுவுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் தொற்று ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago