ரஷ்ய தயாரிப்பான பக் ஏவுகணை மூலம் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று நெதர்லாந்து விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிழக்கு உக்ரைன் பகுதியில் அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதி வழியாக கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்துச் சென்றது. அதில் 283 பயணிகளும் 15 ஊழியர்களும் இருந்தனர்.
டோன்ஸ்க் நகருக்கு அருகே டோரஸ் என்ற பகுதியில் விமானம் பறந்தபோது தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விமானத்தை தாக்கியது. இதில் விமானம் நொறுங்கி அனைத்து பயணிகளும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நெதர்லாந் துகாரர்கள். மற்றவர்கள் ஆஸ்திரே லியா, மலேசியாவைச் சேர்ந்த வர்கள். கிளர்ச்சிப் படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசும், அரசுப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து நெதர்லாந்து அரசு உயர்நிலை விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது.
அதில், ரஷ்ய தயாரிப்பான பக் ஏவுகணை மூலம் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது. கிளர்ச்சிப் படை வீரர் களுக்கு ஏவுகணையை செலுத்தும் திறன் கிடையாது. எனவே ரஷ்ய ராணுவ வீரர்கள்தான் ஏவுக ணையை ஏவியிருக்க முடியும் என்று நெதர்லாந்து நாளிதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த குற்றச் சாட்டை ரஷ்யாவின் பக் ஏவு கணை தயாரிப்பு நிறுவனமான அல்மாஸ்-அண்டே மறுத்துள்ளது.
நெதர்லாந்து விசாரணைக் குழு சில புகைப்படங்களை ஆதாரமாக வைத்தே பக் ஏவுகணை என்று சுட்டிக் காட்டியுள்ளது. அந்த புகைப் படங்கள் தெளிவற்றவை. அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் ராணுவம் 9எம்38 ரக ராக்கெட் மூலம் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த உண்மையை திட்டமிட்டு மறைக்கின்றனர் என்று அல்மாஸ்-அண்டே நிறுவனம் தெரிவித் துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
56 mins ago
உலகம்
22 hours ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago