இரண்டு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்த நிலையில், மூன்றாவதாக மாடர்னா தடுப்பு மருந்தைப் பயன்படுத்த லண்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து லண்டன் தேசிய சுகாதார அமைப்பு அதிகாரிகள் தரப்பில், “ பைசர் தடுப்பை மருந்தைப் போல அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பு மருந்தும் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயலாற்றுகிறது. இதனைத் தொடர்ந்து மாடர்னா தடுப்பு மருந்தை லண்டனில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. சுமார் 17 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago