சீனாவின் ஹெபே மாகாணத்தில் அதிகரிக்கும் கரோனா: ஊரடங்கு அமல்

By செய்திப்பிரிவு

சீனாவில் ஹெபே மாகாணத்தில் கரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ங்கு அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ”சீனாவில் ஹெபே மாகாணத்தில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களாக அங்கு கரோனா இருமடங்காகி உள்ளது.இன்று (வியாழன்) மட்டும் 51 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபே மட்டுமல்லாமல் சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்