பிரிட்டன் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்: உருமாறிய கரோனா வைரஸ் பரவல் எதிரொலி

By செய்திப்பிரிவு

உருமாறிய கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டன் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசரக் கூட்டம் கொண்டுவரப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதியவகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்தது.

போரிஸ் ஜான்சன்

இதற்கு முன்புவரை 3-வது படிநிலைக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பரில் முதல் 4-வது படிநிலை ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்தினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பிரிட்டன் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதனால் அந்நாட்டில் மக்கள் நடமாடத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்