அலிபாபா நிறுவனர் ஜாக் மா இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.
ஜாக் மாவும் இதன் மூலம் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சீன அரசின் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜாக் மாவுக்கு சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜாக் மா, சீன அரசின் கட்டுப்பாட்டில், வீட்டுச் சிறையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இத்தகவல் ஏதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அலிபாபா நிறுவனமும் ஜாக் மா குறித்து இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago