வங்கதேசத்தில் புனித தினத்தை முன்னிட்டு ஷியாப் பிரிவு மக்கள் மேற்கொண்ட பேரணியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒருவர் பலியானார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
வங்கதேச தலைநகர் தாக்காவில் உள்ள ஹுசைனி தலான் என்ற பாரம்பரியமிக்க இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியாப் பிரிவு மக்கள் ஊர்வலத்தை நடத்தினர்.
இரவு 1.30 மணியளவில் அங்குள்ள ஷியா பிரிவினரின் முக்கிய பிரார்த்தனை மையமான 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடத்தை அடைந்தனர். அப்போது அங்கு குண்டு வெடித்தது.
தாக்குதலில் 12 வயது சிறுவன் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கட்டிடத்தினுள் குறைந்தது 5 குண்டுகள் வீசப்பட்டதாகவும் இதில் 3 வெடித்ததாகவும் 2 குண்டுகளை கைப்பற்றியதாகவும் போலீஸார் கூறினர்.
சம்பவ இடத்திலிருந்த சந்தேகத்திற்குரிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago