அமெரிக்காவிலேயே அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்று 20 லட்சத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “அமெரிக்காவின் மிகப்பெரிய் மாகாணமான கலிபோர்னியாவில் கரோனா தொற்று 20,10,004 ஆக உள்ளது. இதுவரை 23,651 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கரோனா அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகளில் படுக்கையறைகள் நிரம்பி வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,26,000 பேர் பலியாகி உள்ளனர்.
டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. மாடர்னா கரோனா தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மைக் பைன்ஸ், ஜோ பைடன் ஆகியோர் மக்களின் அச்சத்தைப் போக்க தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர். இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,50,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கடந்த ஏழு நாட்களில் 18,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன.
எனவே, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
16 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago