உலகப் புகழ்பெற்ற சூப்பர் மாடல் ஸ்டெல்லா டென்னட் மரணம்

By செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற சூப்பர் மாடலான ஸ்டெல்லா டென்னட் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 50.

இதுகுறித்து ஸ்டெல்லா டென்னட்டின் குடும்பத்தினர் தரப்பில், “ஸ்டெல்லா டென்னட் திடீர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்டெல்லா அற்புதமான பெண். அவர் அனைவருக்கும் முன்னோடி. அவர் அனைவராலும் நினைவுகூரப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெல்லாவின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இறுதிச் சடங்குகள் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வந்தர் பின்னணியைக் கொண்ட ஸ்டெல்லா, தனது 18-வது வயதில் முதன்முதலாக ஃபேஷன் இதழின் அட்டைப் படத்தில் இடம்பிடித்தார். இறுதியாக 2018ஆம் ஆண்டு 'வோக்' இதழில் இடம்பெற்றிருந்தார். 30 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு முன்னணி ஃபேஷன் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

90களில் ஃபேஷன் துறையில் புகழின் உச்சத்தில் இருந்தவர்களில் ஸ்டெல்லாவும் ஒருவர். அவரது வித்தியாசமான புகைப்படங்களுக்கு என்று அக்காலகட்டத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டெல்லாவின் மறைவுக்கு ஃபேஷன் துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்