ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்: கடந்த 3 மாதங்களில் பொதுமக்கள் 487 பேர் பலி

By செய்திப்பிரிவு

கடந்த 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 487 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த மூன்று மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 487 பேர் பலியாகினர்.

1,049 பேர் காயமடைந்தனர். 35 தற்கொலைப் படை தாக்குதலும், 507 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடத்துள்ளன. தலிபான்கள் பொதுமக்கள் பலரைக் கொன்றுள்ளனர். இது ஒரு போர்க் குற்றமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்