தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக 1,053 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சியோலில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,053 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சியோலில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தென் கொரியாவில் 48,570 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் கரோனா இறப்பு விகிதம் 1.36% ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இதுவரை கரோனாவுக்கு 659 பேர் பலியாகி உள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.
» காங்கிரஸ் தலைமை பிரச்சினை முடிவுக்கு வருமா? - அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
» அஜய் தேவ்கன் - அமிதாப் படத்தில் நடிகராக அறிமுகமாகும் 21 வயது யூடியூப் பிரபலம்
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது என்பதைச் சார்ந்து தென்கொரியாவில் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago