ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வேன் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, “ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை நான் இதுவரை செலுத்திக் கொள்ளவில்லை. நான் மருந்து குறித்து சிறப்பு ஆய்வாளர்களை ஆலோசித்து வருகிறேன். நான் மிகவும் சட்டத்தை மதிக்கும் நபர். கரோனா தடுப்பு மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணியில் ரஷ்ய அரசு கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago