ஜோ பைடனுக்கு தென்கொரிய அதிபர் மீண்டும் வாழ்த்து

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மீண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்கொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் காங் மின் சியோக் கூறும்போது, “அமெரிக்க வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற ஜோ பைடனுக்கு தென்கொரிய அதிபர் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நிச்சயம் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்று அவர் தெரிவித்தார். கொரிய பிராந்தியத்தில் அமைதியையும், செழிப்பையும் கொண்டு வந்ததில் அமெரிக்கா - தென் கொரியா இடையேயான நட்புறவு முக்கியப் பங்கு வகித்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனுக்கு முன்னரே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இருப்பினும் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் அதிகாரபூர்வ வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்