கரோனா மூன்றாம் கட்ட அலையைத் தவிர்ப்பதற்காக இத்தாலியில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முயற்சி செய்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி அரசுத் தரப்பில், ''பண்டிகை நாட்கள் வர உள்ளதால் இத்தாலியில் மூன்றாம் கட்டக் கரோனா அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனைத் தவிர்ப்பதற்காக கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அலை ஏற்பட்டுவிட்டால் அது மிகப் பெரிய அழிவைத் தரும். அதனைத் தடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் பல மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
» ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை: யுனிசெஃப் வலியுறுத்தல்
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்று தற்போது பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago