ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் ட்ரம்ப் கலந்து கொள்ள போவதில்லை?

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்கும் விழாவில் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள், “ டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை இதுவரை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜனவரி மாதம 20 -ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் பங்கேற்க போவதில்லை என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்