அமெரிக்காவில் செவிலியர் ஓருவருக்கு முதல் முதலாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி முதலில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதல் முதலாக செலுத்தப்பட்டது.
இதுகுறித்து செவிலியர் சாண்ட்ரா லிண்ட்சே கூறும்போது, “ நான் இன்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதன் மூலம் தடுப்பூசி பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறேன். இது நமது வரலாற்றில் மிகவும் வேதனையான நேரத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்குப் பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago