சிரியா: கரோனா தாக்கத்தினால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக சிரியாவில் பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி உள்ளது.

இதுகுறித்து Save the Childre தன்னார்வ அமைப்பு கூறும்போது, “ சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக சிரியாவில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.வடக்கு சிரியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்