அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தொற்று அமெரிக்காவில் கரோனா மோசமாக இருக்கும்: பில் கேட்ஸ்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கரோனா தொற்று மோசமானதாக இருக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கரோனா தடுப்பு மருந்துக்கான விநியோக்கிக்கும் பணியில் ஒரு அங்கமாக உள்ளது. இந்த நிலையில் கரோனா தொற்று குறித்து எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பில்கேட்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தொற்றுநோயின் நிலைமை மோசமானதாக இருக்கலாம். இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே நாம் முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்கா கரோனா தொற்றை இன்னும் கவனமாக கையாள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்