கரோனா தடுப்பு மருந்துகள் டிசம்பர் மாத இறுதியில் மக்களுக்குச் செலுத்தப்படும்: இஸ்ரேல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்துகளை இம்மாத இறுதியில் மக்களுக்குச் செலுத்த இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இம்மாதம் 27ஆம் தேதி பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்த இருக்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 60,000 கரோனா தடுப்பு மருந்துகளைப் பொதுமக்களுக்குச் செலுத்த இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் பைஸர் கரோனா தடுப்பு மருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நவம்பர் மாதம் இஸ்ரேல் வந்தடைந்தன. மேலும், அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்