அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தப்பட மாட்டார் என்பதை அதிபர் ஒபாமா சூசகமாக தெரிவித்துள்ளார்.
2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில் ஆளும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் நீண்ட காலமாக அமெரிக்க அதிபர் ஒபாமா மீது குடியமர்வு சட்டத் திருத்தம், துப்பாக்கி கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், டொனால்ட் டிரம்பால் அமெரிக்காவின் அதிபர் ஆக முடியாது என்று கூறினார்.
மேலும், டொனால்ட் ட்ரம்ப் ஒரு காவிய கால கதாபாத்திரம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
கட்சியின் சார்பில் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நிறுத்தப்பட மாட்டார் என்பதையே ஒபாமா இவ்வாறு சூசகமாக தெரிவித்ததாக அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனுமான ஜெப் புஷ் மற்றும் லூசியானா மாகாண ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் உள்ளிட்ட பலர் குடியரசு கட்சியின் சார்பிலிருந்து வேட்பாளராக இறங்க தயார் நிலையில் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago