ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் அமைந்துள்ள யாசுகுனி கோயிலில் நேற்று ஜப்பான் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வழிபாடு நடத்தினர்.
இதனால் சீனாவும், தென் கொரியாவும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
ஜப்பானில் 1867-ல் நடந்த போஷின் போர் முதல் இரண்டாம் உலகப் போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானி யர்களின் நினைவாக இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ராணுவ ரீதியாக சீனா, தென்கொரி யாவை ஜப்பான்ஆதிக்கம் செலுத்தி யதை நினைவூட்டும் வகையிலும் அமைக்கப்பட்டது.
இங்கு போர் குற்றங்களில் ஈடுபட்ட முக்கிய ராணுவ தளபதி களுக்கு சிலைகளும் உள்ளன. இதற்கு தொடக்கத்தில் இருந்தே சீனாவும், தென்கொரியாவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனவே ஜப்பான் அரசியல் தலைவர் இந்த கோயிலுக்கு முக்கியத்துவம் அளிப்பதை அந்த இரு நாடுகளும் ஏற்றுக் கொள்வது இல்லை.
இப்போது தென் சீன கடலில் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் விஷயத்தில் சீனா, தென்கொரியா, ஜப்பான் இடையே பிரச்சினை உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு வாரங்களில் இந்த மூன்று நாடுகள் இடையே முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் எம்.பி.க் களும், முக்கிய அரசியல் தலைவர் களும் யாசுகுனி கோயிலுக்கு நேற்று சென்று வழிபாடு நடத்தி னர். இது சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த புனித தலத்துக்கு நேரடியாக செல்லாமல் மரக்கன்று அனுப்பிவைத்தார். ஜப்பான் அரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சீனாவும், தென் கொரியாவும் விரைவில் பதில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago