கரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்கள் வந்தாலும் பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கரோனா வைரஸ் குறித்த தகவல்கள் வரவேற்கதக்க தகவல் வந்தாலும் பொது மக்கள் மற்றும் அரசாங்கங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளில் முடிவுகள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. சுரங்கத்தின் முடிவில் ஒளி தெரிகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட தூர பயணம் இருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளின்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளன. ஆரம்பக் கட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்