ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 483 பேர் பலியாக 18,517 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த மாதம் முதல் பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago