பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,75,270 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 1,75,270 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 50,434 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது.
» தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை: 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
» தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்
பிரேசிலின் முக்கிய நகரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் விரைவில் நிரம்பலாம் என்று தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago