பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ அனைத்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
» சிவகங்கை வரும் முதல்வர் பழனிசாமி காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிப்பாரா?
» அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு பைடன் புதிய நிபந்தனை?
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago