அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்

By ஏஎஃப்பி

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந் தத்துக்கு ஈரான் நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த ஜூலையில் இருதரப்புக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் ஈரான் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 161 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 59 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 13 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் 2016 ஜனவரியில் ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

22 hours ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்