சிங்கப்பூரில் கரோனா தொற்று குறைந்தது

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றியதன் காரணமாக கரோனா தொற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். உள்ளூரில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுவரை 58,190 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 58,079 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் படிப்படியாக கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து வரும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாதவர்கள் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இதனை சிங்கப்பூர் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை சிங்கப்பூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்