சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு, சினோபார்ம் நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்திப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில், சீனாவில் நான்கு கோவிட் -19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று தடுப்பூசிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இதில் சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன. இந்த நிலையில் இத்தடுப்பு மருந்துகள் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
» நவம்பர் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
» கந்தசஷ்டியில்... எதிர்ப்பை அழித்து நம்மைக் காப்பான் கந்தகுமாரன்!
இந்த நிலையில் சீனா , பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கரோனா தடுப்பு மருத்துக்கான இறுதிக் கட்டத்தில் உள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago