மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“லாகூரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் இரண்டு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது” என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஹபீஸ் சயித்துடன் சேர்த்து ஐமாத் உத் அவா அமைப்பின் தலைவர்கள் மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் உத் அவா ஒரு தீவிரவாத அமைப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் ஏற்கெனவே பிரகடனம் செய்தன. இதன் அடிப்படையில்தான் ஹபீஸ் சயீத்தின் அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது.
தீவிரவாதி ஹபீஸ் சயீத்தைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், ஹபீஸ் சயீத் மற்றும் ஜமாத் உத் அவா மீது பாகிஸ்தான் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத்துக்கு வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago