பிலிப்பைன்ஸை சூறையாடியது புயல்

By ஏபி

பிலிப்பைன்ஸ் நாட்டின் வட கிழக்குப் பகுதியை புயல் சூறையாடியுள்ளது. இதனால் சுமார் 16 ஆயிரம் பேர் இடம்பெயர்ந் துள்ளனர். புயல் மழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை.

பிலிப்பைன்ஸ் வடகிழக்குப் பகு தியை கோபு என்று பெயரிடப்பட்ட புயல் நேற்றுமுன்தினம் கடந்துச் சென்றது. முதலில் மணிக்கு 450 கி.மீட்டர் வேகத்தில் வீசிய இந்தப் புயல் வலுவிழந்து மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் வீசுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள கசிகுரான், லுசான் ஆகிய நகரங் களைச் சேர்ந்த சுமார் 16 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடலில் 12 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின.

புயலின் சீற்றம் குறைந்துவிட் டாலும் வடகிழக்குப் பகுதி முழு வதும் பலத்த மழை பெய்து வரு கிறது. இதனால் அங்குள்ள நதி களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

புயல் மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை. அவர்கள் உயிரிழந் திருக்கக்கூடும் என்று அஞ்சப்படு கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட் டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துகள் சேதமடைந் துள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இப்பகுதியில் வீசிய புயலில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்