நவம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ ஜெர்மனியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் குறைந்துள்ளது. விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.
வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
» 10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்: விநியோகம் தொடங்கியது
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago