பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக 2,000க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
» வடமாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் பரவுகிறதா?-ஸ்டாலின் கேள்வி
» கஜா புயலின் 2-ம் ஆண்டு: கொத்தமங்கலத்தில் 1000 பனை விதைகளை விதைத்த பனைமரக் காதலர்கள்
ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago