எத்தியோப்பியாவில் துப்பாக்கிச் சூடு: 34 பேர் பலி

By செய்திப்பிரிவு


எத்தியோப்பாவில் துப்பாக்கி ஏந்திய நபர் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 34 பேர் பலியாகினர்.

இதுகுறித்து எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தரப்பில், “ எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.கடந்த சில மாதங்களாக எத்தியோப்பியாவில் இம்மாதிரியான துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த வருடங்களாகவே எத்தியோப்பியாவில் இன ரீதியான மோதல்கள் வலுத்து வருவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.

அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி முடிவுக்கு கொண்டுவந்தார்.

இதன் காரணமாக 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி பெறவிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

30 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்