எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எகிப்து தேசிய கால்பந்து அணி தரப்பில், “ மருத்து குழு பரிசோதனை செய்தத்தில் நட்சத்திர வீரர் முகமது சாலாவுக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.எனினும் அவருக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தொடர்ந்து சாலா மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார். பிற வீரர்களுக்கு கரோனா உறுதிச் செய்யப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் 1,10,095 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,417 பேர் பலியாகி உள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
» மியான்மரில் கரோனா பாதிப்பு 66,734 ஆக அதிகரிப்பு
» இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: 6 மாதத்தில் 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago