பஹ்ரைன் பிரதமர் கலிஃபா மரணம்; உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக இருந்தவர்

By செய்திப்பிரிவு

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணமடைந்தார் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 84.

1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் அடைந்ததிலிருந்து கலிஃபா அந்நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.

இதுகுறித்து அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா இன்று (புதன்கிழமை) மரணமடைந்தார். இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கரோனா காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் இளவரசரின் இறப்பைத் தொடர்ந்து அங்கு ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூன்று நாள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பஹ்ரைனின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் கலிஃபா முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார். அவரது இறப்பு பஹ்ரைனின் அரசியலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்