மீளுமா அமெரிக்கா; மீண்டும் அடிக்கும் கரோனா அலை; ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 201,961 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,38,243 ஆக அதிகரிக்க பலி எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் கோவிட் தரவுகள் தாமதப்படுத்தப்பட்டதால் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்குக் கரோனா என்று தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,535 பேர் மரணமடைந்தனர், கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் இந்த மரண விகிதம் அதிகமே.

கரோனா வைரஸுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா முழுதும் 60,000 பேர் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கோவிட் 19-ன் தீவிரத்தை மறுத்து வந்தார், அது தானாகவே போய்விடும் என்றார்.

இந்நிலையில் அமெரிக்க பார்மா நிறுவனமான ஃபைசர் இதன் ஜெர்மன் கூட்டாளியான பயோஎன்டெக் நிறுவனமும் தங்களது வாக்சின் 90% திறம்பட செயல்படக்கூடியது என்று கோரியுள்ளனர், இது ஒரு பெரிய பாதை திறப்பாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

30 mins ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்