சிரியா உள்நாட்டுப் போர் விவகாரம்: 17 நாடுகள் ஆலோசனை

By ஏஎஃப்பி

சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக வியன்னாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 17 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இதில் பேசிய சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள், சிரியா அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் ரஷ்யாவும் ஈரானும் ஆசாத் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

அவர் பதவியில் இருப்பது குறித்து அந்த நாட்டு மக்கள் தேர்தல் மூலம் முடிவு செய்து கொள்ளட்டும், அதில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்று ரஷ்யாவும் ஈரானும் ஒருமித்த குரலில் தெரிவித்தன.

இந்த ஆலோசனைக் கூட்டத் தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் சிரியாவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று தெரிகிறது.

40 பேர் பலி

இதனிடையே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் அதிபர் ஆசாத்தின் படைகள் நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டவுமா என்ற நகரின் மையப் பகுதியில் திரளான மக்கள் கூடியிருந்த சந்தை யில் இந்த குண்டுகள் விழுந்து வெடித்தன. இதில் 40 பேர் உயிரி ழந்தனர். சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

23 hours ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்