அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடனின் வெற்றி சீனாவின் வெற்றி என்பது போல் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை பயமுறுத்தி வந்தார், ஆனால் அவரது பிரச்சாரங்கள் எடுபடாமல் போக தோல்வி தழுவினார், ஆனால் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து மோசடி, திருட்டு என்று ட்ரம்ப் கூச்சலிட்டு வழக்குகள் பல தொடர்ந்துள்ளார்.
சீனா, ரஷியா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்த கருத்தும் கூறவில்லை. ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், ட்ரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் கூட சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக ஜோ பைடன் அறிவித்துக்கொண்டதை கவனித்தோம். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்.
“சீனா எப்போது அறிக்கை வெளியிடும்? அல்லது ட்ரம்பின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்குமா?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு வாங் வென்பின், “நாங்கள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றுவோம்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago